கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: பந்தை எறிந்த அர்ஷ்தீப்...எகிறிய நியூசிலாந்து வீரர் - நடந்தது என்ன?

இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை.

சென்னை,

டி20 உலகக் கோபை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதற்கிடையில், போட்டியின்போது ஒரு சிறிய சர்ச்சை ஏற்பட்டது. இந்திய அணி பந்துவீச்சில் இருந்தபோது 11-வது ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வீசினார். அப்போது கிரீஸில் இருந்த நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள் அடித்தார்.

அடுத்த பந்தை மிட்செல் பவுலர் திசையில் அடித்தார். அந்த பந்தை பிடித்த அர்ஷ்தீப் சிங் மிட்செல் நோக்கி எறிந்தார். பந்து அவரது தொடையில் பட்டதால், மிட்செல் அர்ஷ்தீப்பிடம் எகிறினார்.

உடனே இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் வந்து மிட்செலை அமைதிப்படுத்தினார். அம்பயர்கள் இரு வீரர்களையும் எச்சரித்தனர். போட்டி முடிந்த பின் அர்ஷ்தீப் சிங் மிட்செலிடம் மன்னிப்பு கேட்டதாக தெரிகிறது. இதனால் அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

Also read:உலகக் கோப்பையுடன் அனுமான் கோவிலில் இந்திய அணி… வைரலாகும் வீடியோ!

இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை. சர்ச்சைக்கு முன்பு அவரது பந்துவீச்சில் வந்த எளிய கேட்சை ஹர்திக் பாண்ட்யா தவறவிட்டார். இதனால், அர்ஷ்தீப் பொறுமையிழந்து அவ்வாறு செய்திருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.