அகமதாபாத்,
இந்தியா–நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னெர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. துவக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் நியூசிலாந்து பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.அபிஷேக் சர்மா 19 பந்துகளில் அரைசதம் விளாசினார். 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த அபிஷேக் சர்மா அவுட் ஆனார். அவருக்குப் பிறகு களமிறங்கிய இஷான் கிஷானும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சற்று நேரத்தில் சஞ்சு சாம்சனும் அரைசதம் விளாசினார். மறுபக்கம் அதிரடி காட்டிய இஷான் கிஷானும் 50 ரன்களை கடந்து அசத்தினார்.
மூன்று பேரின் அதிரடியால் இந்திய அணி ரன் மழை பொழிந்தது. சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷான் 25 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.