கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா அபாரம்.. 104 ரன்னில் சுருண்ட ஓமன்

ஓமன் அணி 16.2 ஓவர்களில் 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பல்லேகல்லே,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 40-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஓமன் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஓமன் அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஓமன் அணியின் பேட்ஸ்மேன்கள், ஆஸ்திரேயியாவின் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். வசிம் அலி அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் ஓமன் அணி 16.2 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜாம்பா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய உள்ளது.