கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: அயர்லாந்து அணிக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது

கொழும்பு,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 14வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிராவிஸ் ஹெட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் 45 ரன்களும் , ரென்ஸாவ் , ஜோஷ் இங்கிலீஸ் தலா 37 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து 183 ரன்கள் இலக்குடன் அயர்லாந்து அணி விளையாடுகிறது.