கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: ஆப்கானுக்கு எதிரான ஆட்டத்தில் கனடா பந்துவீச்சு தேர்வு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - கனடா அணிகள் மோதுகின்றன.

கொழும்பு,

10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 39வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - கனடா அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.

அதில் டாஸ் வென்ற கனடா அணியின் கேப்டன் தில்பிரீட் பாஜ்வா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் தங்களது கடைசி ஆட்டத்தில் மோதுகிறது.