கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி 184 ரன்கள் குவிப்பு

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 184 ரன்கள் குவித்தது.

மும்பை,

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடரை நடத்துகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் தலா 5 அணிகள் என 4 பிரிவுகளாக (ஏ,பி,சி,டி) பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் இன்று நடைபெறும் 5வது ஆட்டத்தில் இங்கிலாந்து - நேபாளம் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் அதிரடி காட்டிய இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தேல் , ஹாரி புரூக் இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதமடித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 184 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து 185 ரன்கள் இலக்குடன் நேபாளம் அணி விளையாடுகிறது.