ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா மற்றும் சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.நடப்பு சாம்பியனான இந்திய அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு 2007 மற்றும் 2024-ல் சாம்பியன் பட்டம் கிடைத்தது. 4-வது தடவையாக இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆடுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.போட்டியை நடத்திய நாடு இதுவரை சாம்பியன் பட்டம் வென்றது கிடையாது. மேலும் எந்த அணியும் 3 முறை 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றது இல்லை. இந்த இரண்டு சாதனைகளையும் படைக்கும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது. நியூசிலாந்து அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வெல்லும் வேட்கையில் இருக்கிறது. 2-வது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. இரு அணிகளும் உலகக் கோப்பையை கைப்பற்ற கடுமையாக போராடும் என்பதால் இறுதிப் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.