புதுடெல்லி,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரை 20 அணிகளில் இருந்து 24 அணிகளாக விரிவுபடுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாற்றம் 2028க்கு பிறகு அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. .
மேலும், எதிர்காலத்தில் டி20 உலகக் கோப்பையை 32 அணிகள் பங்கேற்கும் தொடராக மாற்றவும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மேலும் பல அசோசியேட் நாடுகளுக்கு உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் 16 அணிகள் பங்கேற்ற நிலையில், 2024 மற்றும் 2026 தொடர்களில் 20 அணிகள் பங்கேற்றன. தற்போது 24 அணிகளாக விரிவாக்கும் யோசனை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.