கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: இந்திய அணி புதிய சாதனை

இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

அகமதாபாத்,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி சரவெடியாக வெடித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களான சஞ்சு சம்சன் ( 89 ரன்கள்), அபிஷேக் சர்மா (52 ரன்கள்), இஷான் கிஷான் (54) என அதிரடி காட்டினர். சிக்சர் மழையாக இந்திய அணி பொழிந்தது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து 257 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.19 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 159 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் 96ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் 3வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த உலகக் கோப்பையில் இந்தியா மொத்தம் 106 சிக்சர் விளாசி அசத்தி இருக்கிறது. ஐ.சி.சி. தொடர் ஒன்றில் ஒரு அணியின் அதிகபட்ச சிக்சர்கள் இது தான். இதற்கு முன்பு 2023-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா 99 சிக்சர் எடுத்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

2024-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவிக்கு எதிராக இந்தியா 176 ரன்கள் எடுத் ததே டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஒரு அணியின் அதிகபட்ச மாக இருந்தது. அந்த சாதனையை இப்போது இந்தியா மாற்றி அமைத்துள்ளது.