கொழும்பு,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்துக்கு எதிராக வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்காவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். இலங்கை அணி தனது அடுத்த போட்டியில் ஓமன் அணியை பிப்ரவரி 12-ம் தேதி எதிர்கொள்கிறது.