கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற நேபாளம் அணி பந்துவீச்சு தேர்வு

சூப்பர் 8 சுற்றுக்கு தற்போது வரை 7 அணிகள் இடம்பெற்றுள்ளன.

மும்பை,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில லீக் போட்டிகளே மீதமுள்ளன. இதற்கிடையே, சூப்பர் 8 சுற்றுக்கு தற்போது வரை 7 அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், 33-வது லீக் ஆட்டத்தில் சி பிரிவில் அங்கம் வகித்துள்ள ஸ்காட்லாந்து - நேபாளம் அணிகள் மோதவிருக்கின்றன. இதில் டாஸ் வென்ற நேபாளம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. ஸ்காட்லாந்து மற்றும் நேபாளம் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தகக்து.