லண்டன்,
மகளிருக்கான 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்த நிலையில், இன்று நடைபெறும் 14வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் டீ லீட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.