கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நெதர்லாந்து

நெதர்லாந்து அணி 19.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

கொழும்பு,

டி20 உலகக்கோப்பை தொடர் கொழும்புவில் தொடங்கியுள்ளது. இதன் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

அதன்படி, நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணியின் அபார பந்துவீச்சில் நெதர்லாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கேப்டன் ஸ்காட் எட்வர்ஸ், அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார். இறுதியில் நெதர்லாந்து அணி 19.5 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பாகிஸ்தான் தரப்பில் சல்மான் மிஸ்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 149 அரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய உள்ளது.