கிரிக்கெட்

டி20 உலக கோப்பை: ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

சென்னை,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் நியூசிலாந்து -ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. அணியில் அதிகபட்சமாக குல்பதில் நயின் 63 ரன்கள் எடுத்துள்ளார். நியூசிலாந்து தரப்பில் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் பின் ஆலன் 1 ரன்களும், ரச்சின் ரவீந்திரா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் நியூசிலாந்து அணியில் டிம் சீபராட் அதிரடியாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய அவர் அரைசதமடித்து அசத்தினார். டிம் சீபராட்65 ரன்கள் எடுத்தார். கிளென் பிலிப்ஸ் 42 ரன்கள் எடுத்தார்.

மார்க் சேப்மேன் 28 ரன்களும் , டேரில் மிட்சேல் 25 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 17.5 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. இதனால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.