கிரிக்கெட்

டி-20 உலகக்கோப்பை: அயர்லாந்து அணி முதலாவதாக பேட்டிங்

நமீபியா அணிக்கு எதிரான இன்றைய தகுதிச்சுற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

சார்ஜா,

ஐ.சி.சி. 20 ஓவர் உலகக்கோப்பை 2021 கிரிக்கெட் போட்டி கடந்த 17 ஆம் தேதி தொடங்கி தற்போது ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன. இதில் ஏ பிரிவில் நெதர்லாந்து, நமீபியா, இலங்கை மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் சார்ஜாவில் இன்று நடைபெறும் 11-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் நமீபியா-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. சூப்பர் 12 சுற்றுக்கு இதுவரை 3 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில், 4-வதாக தகுதி பெறவுள்ள அணி எது என்பதை இன்றைய ஆட்டம் தீர்மானிக்கும். இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.