கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை; சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு சச்சின் வாழ்த்து

இந்திய அணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி சரவெடியாக வெடித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களான சஞ்சு சம்சன் ( 89 ரன்கள்), அபிஷேக் சர்மா (52 ரன்கள்), இஷான் கிஷான் (54) என அதிரடி காட்டினர். சிக்சர் மழையாக இந்திய அணி பொழிந்தது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து 257 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.19 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 159 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் 96ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் 3வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில், இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்தியா உலகக் கோப்பையை தொடர்ச்சியாக இரண்டு முறை வென்றது, டி20 வடிவத்தில் எந்த அணியும் இதைச் செய்தது இல்லை. இதுவே முதல் முறை. கோப்பையை வெல்ல முற்றிலும் தகுதியான மற்றும் சரியானவர்கள்.

அணியின் அற்புதமான செயல்திறன் மற்றும் கிரிக்கெட்டின் சிறப்பு பிராண்ட் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஜெய் ஹிந்த்! என தெரிவித்துள்ளார்.