கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: அயர்லாந்து அணிக்கு 164 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை

இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது

கொழும்பு ,

20 அணிகள் பங்கேற்கும் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 6வது ஆட்டத்தில் இலங்கை - அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.அந்த அணியில் குசால் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 56 ரன்கள் எடுத்தார். கமிந்து மெண்டிஸ் 44 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து 164 ரன்கள் இலக்குடன் அயர்லாந்து அணி விளையாடுகிறது.