கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்துக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த யுஏஇ

யுஏஇ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது.

சென்னை,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - யுஏஇ(ஐக்கிய அரபு அமீரகம்) அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற யுஏஇ அணியின் கேப்டன் முகமது வசீம் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி யுஏஇ அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் ஆர்யன்ஸ் ஷர்மா 8 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து முகமது வசீம் , அலிஷான் சராபு ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். அதிரடியாகி விளையாடிய இருவரும் அரைசதமடித்து அசத்தினர். முகமது வசீம் 66 ரன்களும் , அலிஷான் சராபு 55 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் யுஏஇ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 174 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடுகிறது.