கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு பின்னடைவு ....காரணம் என்ன ?

இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா காயமடைந்தார். இதனால் அவர் போட்டியில் பாதியிலே வெளியேறினார்.இது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.இந்த நிலையில் அவரின் காயத்தின் தன்மை குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

SCROLL FOR NEXT