கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: அரையிறுதி மழையால் ரத்தானால் எந்த அணிக்கு வாய்ப்பு ?

இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

சென்னை,

2026 டி20 உலகக் கோப்பை தொடர் ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 போட்டி முடிவடைந்த நிலையில், அரையிறுதி ஆட்டங்கள் நடக்க உள்ளன. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவும் நியூசிலாந்தும் மோதும் அதே வேளையில், இந்தியாவும் இங்கிலாந்தும் இரண்டாவது அரையிறுதியில் மோதுகின்றன.

இந்நிலையில் அரையிறுதி போட்டி மழையால் தடைப்பட்டால் எந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்ற கருத்து சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகி உள்ளது.

அந்த வகையில் ஐசிசி விதிமுறைகளின்படி, அரையிறுதிப் போட்டிகள் மழையால் முழுமையாகக் கைவிடப்பட்டால், 'குரூப் ஸ்டேஜ்' (Super 8) சுற்றில் அதிக புள்ளிகள் பெற்ற அணிக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

அரையிறுதிப் போட்டிகளுக்கு மாற்று நாள் (Reserve Day) ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த நாளிலும் மழை பெய்து ஆட்டம் தடைபட்டால் மட்டுமே இந்தப் புள்ளிப் பட்டியல் விதிமுறை கணக்கில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.