கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: இந்திய ஆடவர் அணிக்கு மகளிர் அணி வீராங்கனைகள் வாழ்த்து

எந்த அணி கோப்பையை வெல்லும் ? என மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் ? என மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய ஆடவர் அணிக்கு இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது.