சென்னை,
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 2026-2027-ம் ஆண்டுக்கான தேர்வு குழு உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதாவது மாநில சீனியர் (ஆண்கள்-4, பெண்கள்-4) மற்றும் ஜூனியர் (ஆண்கள்-5, பெண்கள்-4) தேர்வு குழுவின் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இதேபோல் தமிழக சீனியர் அணிக்கான தலைமை பயிற்சியாளர்களும் தேர்வு செய்யப்படுகின்றனர். தேசிய மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டி களில் விளையாடிய அனுபவம் உடையவர்கள் இந்த பதவிக்கு தகுதி படைத்தவர்கள். வருகிற 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ் நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் பகவான்தாஸ் ராவ் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு www.tnca.in என்ற இணையதளத்தை பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.