கிறிஸ்ட்சர்ச்,
2-வது டி20 போட்டியில் இந்தியாவுக்கு நியூசிலாந்து அணி 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தநிலையில், தொடக்க வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.
இருப்பினும், கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 70 ரன்கள் எடுத்தார்.
மற்றொரு வீரரான பெவன் ஜேக்கப்ஸ் 46 பந்துகளில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 58 ரன்கள் விளாசினார். இந்த இருவரின் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி வலுவான ஸ்கோரை எட்டியது.
இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.