மும்பை,
2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் சிறப்பான ஆட்டம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா சிறப்பாக செயல்பட்டார். இந்த நிலையில் ஐதராபாத் திரும்பிய திலக் வர்மாவை தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி நேரில் அழைத்து பாராட்டினார்.
தெலங்கானா தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தெலங்கானா அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.