கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகிய டென் டோஷ்கேட்

விலகலுக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரபூர்வ விளக்கம் வெளியாகவில்லை.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரயன் டென் டோஷ்கேட், தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இந்த தகவல் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் நெதர்லாந்து ஆல்-ரவுண்டரான டென் டோஷ்கேட், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் பயிற்சியாளர் குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்தார்.

அவரது விலகலுக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. இருப்பினும், இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் விரைவில் மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரயன் டென் டோஷ்கேட் விலகியதைத் தொடர்ந்து, அவரது இடத்தை யார் நிரப்பப் போகிறார்கள் என்பது குறித்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

2024-ல் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, நெதர்லாந்து அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான இவர் இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்தார்.