கிரிக்கெட்

டென்னிஸ் பந்து கிரிக்கெட்: இந்திய அணிகள் ‘சாம்பியன்’

க்ரைன் அணி 8 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 38 ரன்களே எடுத்தது.

சென்னை,

12 நாடுகள் பங்கேற்ற ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி சென்னை காரப்பாக்கத்தில் உள்ள கே.சி.ஜி. கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியா- பக் ரைன் அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி 8 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பக்ரைன் அணி 8 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 38 ரன்களே எடுத்தது.

இந்திய அணி

இதனால் இந்திய அணி 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. முன்னதாக நடந்த பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 22 ரன் வித்தியாசத்தில் தாய்லாந்தை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது. பரிசளிப்பு விழாவில் முன்னாள் எம்.பி. செல்லகுமார், ஐ.ஓ.பி.பொதுமேலாளர் ராஜேஷ், பி.ஏ.எஸ்.எப். நிறுவன நிர் வாக இயக்குனர் சுஜன் சாஹா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். தமிழ்நாடு டென்னிஸ் பந்து சங்க நிர்வாகிகள் ஜாவித் கடாலா, ஞானவேல், சிவராமன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்ட னர்.

SCROLL FOR NEXT