நியூ சண்டிகர்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் நியூசண்டிகாரில் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது.
இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் சாய் சுதர்சன் களமிறங்கி நிலைத்து ஆடி 81 ரன்கள் குவித்தார். பின்னர் கில் களமிறங்கினார்.கேஎல் ராகுல் , கில் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினார். குறிப்பாக கேஎல் ராகுல் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். பொறுப்புடன் விளையாடிய கேஎல் ராகுல் சதமடித்து அசத்தினார். பின்னர் 100 ரன்களில் ஆட்டமிழந்தார். இது அவரது 12வது டெஸ்ட் சதமாகும்.