புதுச்சேரி,
இந்தியா 'ஏ'- ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புதுச் சேரியில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 334 ரன்னும், ஆஸ்திரேலியா 171 ரன்னும் எடுத்தன. 163 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 199 ரன்னில் ஆல்-அவுட் ஆனதால், ஆஸ்திரேலிய அணிக்கு 363 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ் திரேலியா 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 55 ரன்கள் எடுத்திருந்தது.4-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 55.1 ஓவர்களில் 200 ரன்னில் அடங்கியது. இதனால் இந்திய 'ஏ' அணி 162 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் ஷம்ஸ் முலானி, துஷார் தேஷ்பாண்டே தலா 3 விக்கெட்டும். அன்ஷூல் கம்போஜ், தனுஷ் கோடியன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய வீரர் குமார் குஷக்ரா (113 மற்றும் 46 ரன்) ஆட்டநாயகன் விருது பெற்றார். இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இதே மைதானத்தில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.