கிரிக்கெட்

வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு

முகமது அப்பாஸ் அழைக்கப்பட்டுள்ளார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (மே) வங்காளதேசம் சென்று 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் டாக்காவில் மே 8-ந் தேதி தொடங்குகிறது. வங்காளதேச டெஸ்ட் தொடருக் கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு 15 மாத இடைவெளிக்கு பிறகு 36 வயது வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் அழைக்கப்பட்டுள்ளார். அறிமுக வீரர்களாக பேட்ஸ்மேன்கள் அப்துல்லா பசல், அசான் அவைஸ், ஆல்-ரவுண்டர் அமாத் பட், விக்கெட் கீப்பர் காஜி கவுரி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். முன்னாள் டெஸ்ட் கேப்டன் சர்ப்ராஸ் அகமது புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணி: ஷான் மசூத் , அப்துல்லா ஃபசல், அமத் பட், அஸான் அவாய்ஸ், பாபர் அசாம், ஹசன் அலி, இமாம்-உல்-ஹக், குர்ரம் ஷாஜாத், முகமது அப்பாஸ், முகமது ரிஸ்வான், காஜி கோரி, நோமன் அலி, சஜித் கான், சல்மான் அலி ஷாஹீன் அகேல்