கிரிக்கெட்

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: 2-ம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 134-4

2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 48 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.

டாக்கா,

வங்காளதேச அணி 97.4 ஓவர்களில் 272 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

முதல் டெஸ்ட்

வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

வங்காளதேசம் பேட்டிங்

இதனை தொடர்ந்து வங்காளதேச அணியின் தொடக்க வீரர்களாக ஷத்மென் இஸ்லாம், ஹசன் தமீம் களமிறங்கினர். தமீம் 7 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனால் தொடங்க வீரர் ஷத்மென் இஸ்லாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

272 ரன்னுக்கு ஆல் அவுட்

முதல்நாள் ஆட்டநேர முடிவில் வங்காளதேசம் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்த நிலையில், இன்று 2-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷத்மென், சதமடித்து, 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்களுக்கு தொடக்கம் கிடைத்தும், அதனை பெரிய ஸ்கோராக மாற்ற தவறினர். இறுதியில் வங்காளதேச அணி 97.4 ஓவர்களில் 272 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 48 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. சந்தர்பால் 43 ரன்னுடனும், கிரீவ்ஸ் 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளை 3-ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT