சில்ஹெட்,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (நவம்பர் 5) சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இதனால் தொடரைச் சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் வங்கதேச அணி களமிறங்குகிறது. மறுபுறம், வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி அல்லது டிரா மூலம் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோஸ்டன் சேஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் வங்காளதேச அணி 70 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்துள்ளது. அமீர் ஜாங்கோ அபாரமாக விளையாடி சதமடித்தார். அவர் 111 ரன்களுடனும், கிரீவ்ஸ் 35 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளை 2ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.