கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

லண்டன்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக் கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இங்கி லாந்து- நியூசிலாந்து அணி இடையிலான முத லாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று தொடங்கியது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அந்த வகையில் இந்த தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.