கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

லண்டன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது.

லண்டன் லார்ட்சில் தற்போது மழை பெய்ததால் இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், மழை நின்ற பின் போட்டி தொடங்கி உள்ளது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.