லண்டன்,
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.இதற்கான நியூசிலாந்த அணியில் கேன் வில்லியம்சன் இடம் பிடித்திருந்தார். இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆனார். 2-வது இன்னிங்சில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கேன் வில்லியம்சன் அதிர்ச்சி முடிவை வெளியிட்டார்.
இதனால் அவருக்குப் பதிலாக வில் யங் அணியில் சேர்க்கப்பட்டார். நாளை தொடங்கும் 2-வது போட்டியில் வில் யங் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2-வது போட்டியில் ஹென்றி நிக்கோல்ஸ் அணியில் இடம் பிடிப்பார் என்று நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.