நியூ சண்டிகார்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி. ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலத்தின் நியூ சண்டிகாரில் நேற்று தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 564/8 ரன்கள் எடுத்திருந்தநிலையில், முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. கேஎல் ராகுல், கில் சதமடித்து அசத்தினர். ஆப்கானிஸ்தான் அணியில் சலீம் சபி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதனால் சலீம் சபி புதிய சாதனை படைத்துள்ளார்.
இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தும் முதல் ஆப்கானிஸ்தான் வேகப்பந்துவீச்சாளராக சாதனை படைத்துள்ளார்.