கொழும்பு,
இலங்கைக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்தியா - இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் காலேயில் நாளைமறுதினம் (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி பயிற்சி ஆட்டத்தில் இலங்கை லெவன் அணியை தோற்கடித்த உற்சாகத்தோடு இந்திய வீரர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் விளையாடும் இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ஆல்-ரவுண்டர் தனஞ்ஜெயா டி சில்வா தொடருகிறார்.
16 பேர் கொண்ட இலங்கை அணி வருமாறு:-
தனஞ்ஜெயா டி சில்வா (கேப்டன்), லஹிரு உதரா, நிஷான் மதுஷ்கா, கமிந்து மென்டிஸ், தினேஷ் சன்டிமால், பசிந்து சூரியபண்டாரா. சோனல் தினுஷா, நிரோஷன் டிக்வெல்லா, ரமேஷ் மென்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா, கேஷரா நுவாந்தா, மிலன் ரத்னாயக்கே, அசிதா பெர்னாண்டோ, லஹிரு குமாரா, விஷ்வா பெர்னாண்டோ, தில்ஷன் மதுஷன்கா.