சிட்னி,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டி தொடர் டர்பனில் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடர் அக்டோபர் 9-ந் தேதி தொடங்குகிறது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 3-வது வரிசையில் ஆடும் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்சேன் ஆச்சரியம் அளிக்கும் வகையில் தனது இடத்தை தக்கவைத்துள்ளார். 2023-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு பிறகு சதம் அடிக்காத லபுஸ்சேன் தனது கடைசி 43 டெஸ்ட் இன்னிங்சில் 24.69 சராசரியாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி வருமாறு:-
கம்மின்ஸ் (கேப்டன்) ஸ்காட் போலன்ட், அலெக்ஸ் கேரி, கனோலி, கேமரூன் கிரீன், ஹேசில் வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மேத்யூ குனேமேன், மார்னஸ் லபுஸ்சேன், நாதன் லயன், மைக்கேல் நேசர், மேத்யூ ரென்ஷா, ஸ்டீவன் சுமித், மிட்செல் ஸ்டார்க், வெப்ஸ்டர்.