கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: படிக்கல் சதம் விளாசல்

நிதானமாகவும் சிறப்பாகவும் விளையாடிய தேவ்தத் படிக்கல், 134 பந்துகளில் சதத்தை எட்டினார்.

காலே,

தேவ்தத் படிக்கல் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார். காலேயில் நடைபெற்று வரும் போட்டியில், இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 32 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய படிக்கல், கே.எல். ராகுலுடன் இணைந்து இந்திய அணியின் இன்னிங்ஸை வலுப்படுத்தினார்.

நிதானமாகவும் சிறப்பாகவும் விளையாடிய தேவ்தத் படிக்கல், 134 பந்துகளில் சதத்தை எட்டினார். படிக்கலுக்கு இது மிகவும் முக்கியமான சதமாக அமைந்துள்ளது. தனது 3-வது டெஸ்ட் போட்டியிலேயே முதல் சதத்தை பதிவு செய்த அவர், இந்திய அணியின் 3-வது இடத்துக்கான தனது இடத்தை வலுப்படுத்தியுள்ளார்.

இந்த போட்டியில் கே.எல். ராகுலும் சிறப்பாக விளையாடி 77 ரன்கள் எடுத்தார். ஆனால் காயம் காரணமாக அவர் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். இதன்பிறகு கேப்டன் கில் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.

படிக்கல், ரிஷப் பண்ட் இருவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.இந்திய அணி 250 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.