கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியில் சாரான்ஷ் ஜெயின் சேர்ப்பு

வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை,

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.இந்திய டெஸ்ட் அணியில் முதல் முறையாக சாரான்ஷ் ஜெயின் இடம்பிடித்துள்ள்ளார்.காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் கிரிக்கெட்டிலும், இந்தியா 'ஏ' அணிக்காகவும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த சரன்ஷ் ஜெயினுக்கு, பல ஆண்டுகால கடின உழைப்புக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியின் கதவு திறந்துள்ளது. குறிப்பாக, சமீபத்தில் இலங்கை 'ஏ' அணிக்கு எதிரான தொடரில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டது அவரது தேர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

தனது தேர்வு குறித்து பேசிய சரன்ஷ் ஜெயின், "இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற கனவை நான் ஒருபோதும் கைவிடவில்லை. பல ஆண்டுகளாக கடினமாக உழைத்ததற்கான பலன் தற்போது கிடைத்துள்ளது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.