காலே,
காலேயில் நடைபெறும் முதல் டெஸ்டின் ஆட்டம் மழை காரணமாக இடையிடையே பாதிக்கப்பட்ட நிலையில், முதல் நாள் முடிவில் இந்தியா 73 ஓவர்களில் 288 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற வலுவான நிலையில் ஆட்டத்தை முடித்தது.
இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 32 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய படிக்கல், கே.எல். ராகுலுடன் இணைந்து இந்திய அணியின் இன்னிங்ஸை வலுப்படுத்தினார்.
நிதானமாகவும் சிறப்பாகவும் விளையாடிய தேவ்தத் படிக்கல், 134 பந்துகளில் சதத்தை எட்டினார். படிக்கலுக்கு இது மிகவும் முக்கியமான சதமாக அமைந்துள்ளது.
இந்த போட்டியில் கே.எல். ராகுலும் சிறப்பாக விளையாடி 77 ரன்கள் எடுத்தார். ஆனால் காயம் காரணமாக அவர் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். இதன்பிறகு கேப்டன் கில் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ரிஷப் பண்ட் களமிறங்கி, படிக்கலுடன் இணைந்து ஆட்டத்தைத் தொடர்ந்தார். முதல் நாள் முடிவில் பண்ட் 27 ரன்களுடனும், படிக்கல் 131 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.