லண்டன்,
இந்தியா- இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் லீக் சுற்றில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்தி ரேலியாவிடம் தோல்வி கண்டு அரைஇறுதி வாய்ப்பை இழந்து ஏமாற்றம் அளித்தது.
இந்த நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் அணி, நாட்சிவெர் தலைமையிலான இங்கிலாந்து அணியுடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. இந்த டெஸ்ட் போட்டி புகழ் பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 13-ந் தேதி வரை நடக்கிறது.
142 ஆண்டு காலமாக லார்ட்ஸ் மைதானத்தில் ஆண்கள் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. கிரிக்கெட்டின் தாயகம் என்று அழைக்கப்படும் லார்ட்சில் அரங்கேறும் முதல் பெண்கள் டெஸ்ட் போட்டி இதுவாகும். இதனால் இந்த போட்டி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
இதே மைதானத்தில் கடந்த வாரம் இறுதியில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்த கையோடு இங்கிலாந்து அணி இந்த போட்டியில் களம் இறங்குகிறது.
இந்திய அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிர்தி மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், கிரந்தி கவுட், ரேணுகா சிங் உள்ளிட்ட சிறந்த வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணியில் கேப்டன் நாட்சிவெர், டாமி பீமோன்ட், அலிஸ் கேப்சி, சோபி எக்லெஸ்டோன், அமி ஜோன்ஸ், ஹீதர் நைட் உள்பட தர மான வீராங்கனைகள் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த போட்டியுடன், டெஸ்டில் முதல் இரட்டை சதம் விளாசிய இங்கி லாந்து வீராங்கனை என்ற பெருமைக்குரிய டாமி பீமோன்ட் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவரை வெற்றிகரமாக வழியனுப்பி வைக்க இங்கிலாந்து அணியினர் ஆர்வம் காட்டுவார்கள்.
மொத்தத்தில் லார்ட்சில் நடைபெறும் முதல் பெண்கள் டெஸ்ட் போட்டி யில் முத்திரை பதிக்க இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என் பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1, 2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.