கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: படிக்கல் முன்னேற்றம்

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 5 இடங்கள் சறுக்கி 15-வது இடத்தை பெற்றுள்ளார்.

புதுடெல்லி,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் (856 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். பாகிஸ் தானுக்கு எதிராக லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ் டில் 4 மற்றும் 24 ரன் வீதம் எடுத்து தடுமாறிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 2-ல் இருந்து 3-வது இடத்துக்கு (820 புள்ளி) இறங்கினார். இதனால் 3-வது இடம் வகித்த ஆஸ்தி ரேலியாவின் ஸ்டீவன் சுமித் 2-வது இடத்துக்கு (840) உயர்ந் தார். இந்திய கேப்டன் சுப்மன் கில் இரு இடம் பின்தங்கி 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ரிஷப் பண்ட் 7-வது இடத்திலும், ஜெய்ஸ்வால் 11-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 5 இடங்கள் சறுக்கி 15-வது இடத்தை பெற்றுள்ளார்.

கொழும்பில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சதம் விளாசி சாதனை படைத்த இலங்கை வீரர் சோனல் தினுஷா 29 இடங்கள் எகிறி 25-வது இடத்தை வசப்படுத்தியுள்ளார். இதே டெஸ்டில் சதம டித்த இந்திய வீரர்கள் தேவ்தத் படிக்கல் 5 இடங்கள் முன் னேறி 54-வது இடத்தையும், துருவ் ஜூரெல் 18 இடங்கள் அதிகரித்து 65-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதே போட்டியில் 80 மற்றும் 92 ரன்கள் வீதம் எடுத்த இலங்கையின் பசிந்து சூரியபண்டாரா 170 இடங்கள் மேலோங்கி 74-வது இடத்தை பெற்றுள்ளார்.

SCROLL FOR NEXT