மிர்பூர்,
ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் ஹசன் ஜாய் 8 ரன்கள், சதாம் இஸ்லாம் 13 ரன்களும் எடுத்தனர். பின்னர் மொமினுல் ஹக், நஜ்முல் ஹொசைன் இருவரும் சிறப்பாகி விளையாடி ரன்கள் குவித்தனர். நஜ்முல் ஹொசைன் நிலைத்து விளையாடி சதமடித்து அசத்தினார். அவர் 101 ரன்களில் ஆட்டமிழந்தார். மொமினுல் ஹக் 91 ரன்களில் வெளியேறினார்.
முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிரு வங்காளதேச அணி 301 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. அனுபவ வீரரான முஷ்பிகுர் ரஹிம் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். லிட்டன் தாஸ் 33 ரன்கள் எடுத்தார். கடைசியில் டஸ்கின் அகமது அதிரடியுடன் 29 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. இறுதியில் வங்காளதேச அணி, 117.1 ஓவர்கள் விளையாடி 413 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய உள்ளது.