சென்னை,
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காங்கில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், கனடாவின் வென் யூ ஜாங் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய மாளவிகா பன்சோத் 13-21, 26-24, 21-13 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தேவிகா சிஹாக் 21-19, 13-21, 21-15 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நட்சுகி நிடைராவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.