சென்னை,
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காங்கில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், சீனாவின் ஜூ சுவான்சென் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய லக்சயா சென் 21-12, 21-13 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.