கிரிக்கெட்

ஒவ்வொரு சிஎஸ்கே ரசிகருக்கும் நன்றி: கலீல் அகமது உருக்கம்

கலீல் அகமது ரூ.4.8 கோடிக்கும். நாதன் எலிஸ் (ஆஸ்திரேலியா) ரூ.2 கோடிக்கும் ஐதராபாத் அணிக்காக கால்பதிப்பார்கள்.

20-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடக்கிறது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலட அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி கோவாவில் நடக்கிறது. அதற்கு முன் பாக வீரர்களை பரஸ்பர வர்த்தக பேச்சுவார்த்தை அடிப்படையில் பரிமாற்றட (டிரேடிங்) செய்யும் நடைமுறை தற்போது நடந்து வருகிறது. பங்கேற்கும் 10 அணிகளும் தக்க வைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வருகிற 17-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். நிர்வாகம் கெடு விதித்துள்ளது. அதற்குள் டிரேடிங்கையும் முடித்துக் கொள்ள வேண்டும்.

சென்னை அணி

இந்த நிலையில் இரு 'டிரேடிங் வெற்றிகரமாக நடந்துள்ளது. இதன் படி முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வேகப்பந்து வீச்சாளர்கள் கலீல் அகமது, நாதன் எலிஸ் ஆகியோரை ஐதராபாத்துக்கு ஒதுக்கி விட்டு, அவர்களுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர்கள் லியாம் லிவிங்ஸ்டன் (இங்கிலாந்து), ஜேக் எட்வர்ட்ஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோரை இழுத்துள்ளது.

கலீல் அகமது

கலீல் அகமது வெளியிட்டுள்ள பதிவில்,

மஞ்சள் ஜெர்சியில் இரண்டு அற்புதமான ஆண்டுகள். இந்த இரண்டு வருடங்களை வார்த்தைகளில் சொல்ல நினைத்தாலே மனம் முழுக்க நன்றி பொங்குகிறது. நீங்கள் கொடுத்த நினைவுகள், நிபந்தனையற்ற அன்பு, மரியாதை எல்லாமே வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.

ஒவ்வொரு சிஎஸ்கே ரசிகருக்கும் நன்றி. ஒவ்வொரு டாட் பாலுக்கும், ஒவ்வொரு விக்கெட்டுக்கும், ஒவ்வொரு சிறப்பான ஆட்டத்துக்கும் அனைவரையும் விட உரக்கக் குரல் கொடுத்தீர்கள். ஏற்றத்திலும் இறக்கத்திலும் 'விசில் போடு' என்பதை நீங்கள் வாழ்ந்து காட்டிய விதத்தை என்றும் மறக்க மாட்டேன். இந்த அன்புக்கும், நினைவுகளுக்கும், இந்தக் குடும்பத்துக்கும் மனமார்ந்த நன்றி. இந்த அத்தியாயத்தை மறக்க முடியாததாக்கிய மஞ்சள் படைக்கு நன்றி. என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT