மும்பை,
2027-ம் ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இந்தியாவிலேயே நடைபெறும் என பிசிசிஐ முடிவு செய்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக வெளிநாடுகளில் நடைபெற்ற ஐபிஎல் ஏலம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது.
2023-ம் ஆண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலம் கொச்சியில் நடைபெற்றது. அதன்பிறகு தொடர்ந்து 3 ஆண்டுகள் வெளிநாடுகளில் ஏலம் நடத்தப்பட்டது.
2024-ம் ஆண்டு துபாயிலும், 2025-ம் ஆண்டு மெகா ஏலம் ஜெட்டாவிலும், 2026-ம் ஆண்டு ஏலம் அபுதாபியிலும் நடைபெற்றது. தற்போது 2027-ம் ஆண்டு ஏலத்தை மீண்டும் இந்தியாவில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் 2027 ஏலம் மினி ஏலமாக நடைபெற உள்ளது. இதனால் மெகா ஏலத்தைப் போன்று அணிகளில் மிகப்பெரிய அளவில் வீரர்கள் மாற்றம் இருக்காது.
பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, அணிகளின் நிர்வாகத்துக்கும் வெளிநாட்டு பயணச் சுமையை குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.