பெங்களூரு,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.இந்த தொடரில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 23-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம் பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொண்டது.இந்த போட்டி முடிவில் ஆர்.சி.பி. அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 146 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.இதைத் தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 15.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெற்றி குறித்து பேசிய பெங்களூருஅணி கேப்டன் ரஜத் படிதார் ,
"பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. இதில் ஒரு நல்ல விஷயம், டாஸ் வென்றது தான் என்று கருதுகிறேன்.ஒரு கேப்டனுக்கு, டி20 தொடர்களில் நிபுணத்துவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருந்தால், அது வேலையை எளிதாக்குகிறது. ஏனென்றால், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவர்களிடம் சொல்ல வேண்டியதில்லை. அந்த அனுபவமும் யோசனைகளும் மற்ற எல்லா பந்துவீச்சாளர்களுக்கும் உதவுகின்றன.என்றார்.