image courtesy: Sri Lanka Cricket twitter 
கிரிக்கெட்

நியூசிலாந்து-இலங்கை மோதும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் - வெலிங்டனில் நாளை தொடக்கம்

நியூசிலாந்து-இலங்கை மோதும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் வெலிங்டனில் நாளை தொடங்குகிறது.

வெலிங்டன்,

கருணாரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி கடைசி பந்தில் இலக்கை (285 ரன்) எட்டிப்பிடித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முன்னாள் கேப்டன் வில்லியம்சன், டேரில் மிட்செல் ஆகியோர் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.

இந்த நிலையில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இந்திய நேரப்படி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. உள்ளூரில் தனது ஆதிக்கத்தை தொடருவதுடன் தொடரை வெல்ல நியூசிலாந்து தீவிர முனைப்பு காட்டும். அதேநேரத்தில் தொடரை இழக்காமல் இருக்க இலங்கை அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த டெஸ்ட் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

SCROLL FOR NEXT