கிரிக்கெட்

இந்தியா-இலங்கை இடையே டிச.13-ந்தேதி டெல்லியில் நடைபெறவிருந்த போட்டி இடமாற்றம்

டெல்லியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்றம் செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்து உள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே டி20 தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் பின்னர் 2 போட்டிகள் கொண்ட டெஸ் தொடரை முடித்துக்கொண்டு இந்திய அணி தாயகம் திரும்புகிறது.

ஒருநாள் தொடர்

இதன் பின்னர் இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி டெல்லியில் டிசம்பர் 13-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. இதற்கிடையே, டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசு காரணமாக போட்டி நடத்துவதில் இடையூறு ஏற்படும் என்றும், போட்டியை வேறு மைதானத்துக்கு மாற்றுமாறும் டெல்லி கிரிக்கெட் வாரியம் பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்து இருந்தது.

இடமாற்றம்

இந்த நிலையில், இந்தியா-இலங்கை இடையே டிச.13-ந்தேதி டெல்லியில் நடைபெறவிருந்த போட்டி வேறு மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, டெல்லியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்றம் செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்து உள்ளது.

SCROLL FOR NEXT